நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே வயிற்று வலியால் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்தவர் மூர்த்தி, 50; விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை வயிற்று வலி அதிகமானதால், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை மூர்த்தி குடித்தார்.ஆபத்தான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று இறந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.