/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுப்பன்றிகளை பிடிக்க அனுமதி விவசாயிகள் நிம்மதி
/
காட்டுப்பன்றிகளை பிடிக்க அனுமதி விவசாயிகள் நிம்மதி
காட்டுப்பன்றிகளை பிடிக்க அனுமதி விவசாயிகள் நிம்மதி
காட்டுப்பன்றிகளை பிடிக்க அனுமதி விவசாயிகள் நிம்மதி
ADDED : ஜூன் 28, 2024 01:10 AM
நெல்லிக்குப்பம்: விவசாயி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க அரசு அனுமதி வழங்கியதால் நெல்லிக்குப்பம் பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் பகுதி காடுகளில் இருந்து வழிதவறி வரும் காட்டுப்பன்றிகள், விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது. இதே நிலை தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வருகிறது. எனவே, கேரளாவில் பயிர்களை சேதபடுத்தும் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்ததுபோல், தமிழகத்தில் வழங்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில், வனத்துறை மான்ய கோரிக்கையின்போது, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து காட்டுப் பன்றிகளை பிடிக்க அனுமதி வழங்கபடுகிறது. காப்பு காட்டில் இருந்து 5 கி.மீட்டருக்க அப்பால் காட்டுப் பன்றிகளை பிடிக்கலாம்.
இதற்காக வன அலுவலர், வி.ஏ.ஓ.மற்றும் மக்கள் பிரதிநிதி அடங்கிய குழு பார்வையிட்டு பரிந்துரை செய்யும். என, அறிவித்தார். இந்த அறிவிப்பால், நெல்லிக்குப்பம் பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.