/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் நிவாரணம் கிடைத்தது விவசாயிகள் மகிழ்ச்சி
/
புயல் நிவாரணம் கிடைத்தது விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 06, 2025 01:48 AM
நெல்லிக்குப்பம்: பெஞ்சல் புயலால் ஏற்பட்ட விவசாய பாதிப்புக்கு, அரசு நிவாரணம் வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலுார் விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பெஞ்சல் புயல் தாக்கியது. இதில் பலர் வீடுகளை இழந்தனர். முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் ஒரு மாதத்திலேயே கிடைத்தது.
ஆனால், கடலுார், விழுப்பரம் மாவட்டங்களில பல ஆயிரம் ஏக்கர் நெல், மணிலா, வாழை உள்ளிட பயிர்கள் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதித்த பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. அதற்கான நிதியை, தமிழக அரசு சமீபத்தில் விடுவித்தது. அதையடுத்து, கடலுார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நேற்று நிவாரண தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நெற்பயிர் பாதிப்புக்கு நிவாரணத்தை வழங்கியுள்ளனர். ஓரிரு நாட்களில் கரும்பு உள்ளிட்ட பாதித்த மற்ற பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரணம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.