/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேட்டூரில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை: குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலையால் பாதிப்பு
/
மேட்டூரில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை: குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலையால் பாதிப்பு
மேட்டூரில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை: குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலையால் பாதிப்பு
மேட்டூரில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை: குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலையால் பாதிப்பு
ADDED : ஜூன் 14, 2024 06:32 AM
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு மூலம் காவிரி டெல்டா பாசனம் 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பில் காவிரி டெல்டா பாசனம் பெறுகிறது. மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பதின் மூலம் டெல்டா பகுதியில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். அணையில் இருந்து வழக்கமாக டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28ல் மூடப்படும். கர்நாடகா அரசு தண்ணீர் தவா பிரச்னையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவதால், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மற்றும் மூடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 2022ம் ஆண்டில் மே மாதத்தில் மேட்டூர் அணையில் 100 அடி அளவில் தண்ணீர் இருப்பு இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு முன்கூட்டியே மே 24ம் தேதி திறந்துவிடப்பட்டன.
அந்த ஆண்டு டெல்டாவில் விவசாயிகள் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்தனர். கடந்த 2023ம் ஆண்டும் மேட்டூர் அணையில் 90 அடி அளவில் தண்ணீர் இருப்பு இருந்த நிலையில் வழக்கமான ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டன.
இதனால் கடந்த ஆண்டும் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வம் காட்டினார்கள். அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆகஸ்ட் மாதமே அணை மூடப்பட்டன. இதனால் சம்மா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பல பகுதிகளில் தாளடி சாகுபடி செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு கோடையில் போதிய தண்ணீர் இல்லாமல் மேட்டூர் ஆணை வறண்டு காணப்பட்டது. அணைக்கு வரத்தும் இல்லாததால் பல மாதங்களாக அணையில் நீர் மட்டம் உயரவில்லை. தற்போது மேட்டூர் அணையில் நீர் மட்டம் 45 அடியாக தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தற்போது உள்ள தண்ணீர் இருப்பு நிலவரப்படி டெல்டா பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியாவது செய்ய முடியுமா என விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் கடலுார் மாவட்ட டெல்டாவான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதியில் விவசாயிகள் நிலம் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு விவசாயம் முறையாக நடக்குமா என டெல்டா விவசாயிகளிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.