
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; புகைப்படம் எடுப்பவர்கள், உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, பொருளாளர் சேகர் தலைமை தாங்கினர். பாஸ்கரன், ஜெமினி கல்யாண முருகன் வரவேற்றனர். மாநில தலைவர் சிவகுமார், பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், மாநில பொருளாளர் சுரேஷ், அமைப்பாளர் சரவணன், துணைத் தலைவர்கள் அசோக், பொன்னுசாமி, இணை செயலாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், புகைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.