/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் தீ விபத்து 2 வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் சேதம்
/
நெல்லிக்குப்பத்தில் தீ விபத்து 2 வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் சேதம்
நெல்லிக்குப்பத்தில் தீ விபத்து 2 வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் சேதம்
நெல்லிக்குப்பத்தில் தீ விபத்து 2 வீடுகள் எரிந்து ரூ.2 லட்சம் சேதம்
ADDED : ஆக 18, 2024 11:48 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.
நெல்லிக்குப்பம் சோழவல்லியை சேர்ந்தவர் ராஜகோபால்,62 விவசாயி.இவரது கூரை வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் இருந்தனர்.
அப்போது வீடு திடீரென தீப்பிடித்ததால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியபடி கூச்சலிட்டனர். உடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
அச்சமயம் காற்று அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த அவரது மகன் மகாதேவன் வீடும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.