/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பை குவியலில் தீ; பொதுமக்கள் அவதி
/
குப்பை குவியலில் தீ; பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 26, 2024 11:35 PM

கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைக் குவியலில் ஏற்பட்ட தீ காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் நாள்தோறும் 20 முதல் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்ட இடமின்றி ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் துப்புரவு தொழிலாளர்கள் தீயிட்டு எரிக்கின்றனர்.
கடலுார் ஜவான்ஸ் பவன் சாலை கெடிலம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் நேற்று காலை தீ வைக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி சாலையை புகை சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண் எரிச்சலாலும், மூச்சுத் திணறலாலும் கடும் அவதியடைந்தனர்.
தகவலறிந்த கடலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.

