/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய வாலிபருக்கு வெளியுறவுத்துறை உதவி
/
சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய வாலிபருக்கு வெளியுறவுத்துறை உதவி
சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய வாலிபருக்கு வெளியுறவுத்துறை உதவி
சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய வாலிபருக்கு வெளியுறவுத்துறை உதவி
ADDED : மார் 14, 2025 05:17 AM

விருத்தாசலம்: சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய விருத்தாசலம் வாலிபர், கடலுார் எம்.பி., முயற்சியால், சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எடச்சித்துார் முத்துகிருஷ்ணன் மகன் அஜித்குமார், 26; பி.எஸ்.சி., அக்ரி முடித்த இவர், சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த மாதம் 10ம் தேதி பணியில் இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் தனியார் நிறுவனம் சார்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மகனை இந்தியா மீட்டு வர வேண்டும் என விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்திடம், அஜித்குமார் பெற்றோர்கள் மனு கொடுத்தனர். இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு, ஆர்.டி.ஓ., தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், அஜித்குமார் வீட்டிற்கு சென்று, ஆறுதல் கூறி, கலெக்டர் மற்றும் கடலுார் எம்.பி.,க்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு அவரை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தார். இது குறித்து எம்.பி., விஷ்ணு பிரசாத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இரண்டு முறை கடிதம் அனுப்பினர்.
அதன்பேரில், சிங்கப்பூர் துாதரக அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று அஜித்குமாருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து, ஸ்டண்ட் பொறுத்தி இருப்பது தெரிந்தது. இதனால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இந்தியா அழைத்து வர அதிக செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், இந்திய வெளியுறவுத்துறை தொடர் முயற்சியால், நேற்று முன்தினம் மதியம், சிறப்பு விமானம் மூலம் அஜித்குமார் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, சென்னை அண்ணா நகர் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய வாலிபரை், வெளியுறவுத்துறை முயற்சியால் இந்தியா அழைத்து வரப்பட்டது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.