/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வனச்சரக அலுவலகம் மாணவர்கள் பார்வை
/
வனச்சரக அலுவலகம் மாணவர்கள் பார்வை
ADDED : மே 17, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் வனச்சரக அலுவலகத்தில், வன விலங்குகள் செயல்பாடு குறித்து வேளாண் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சிக் கழக இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்கள். அவர்கள், விருத்தாசலம் வனச்சரக அலுவலகத்தை பார்வையிட்டனர்.
அப்போது, வனவர் சிவக்குமார், வனக்காவலர் அமுதபிரியன் ஆகியோரிடம் வனத்துறை செயல்பாடு, நிர்வாக கட்டமைப்பு, வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதம், கட்டுப்படுத்தும் வழிகள், வன விலங்குகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

