/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கிடப்பில் போட்டது தி.மு.க., ஆட்சி' 'மாஜி' அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு

ADDED : பிப் 28, 2025 05:05 AM

கடலுார்: கடலுாரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டனர் என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
கடலுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் முதுநகரில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில மீனவரணி செயலாளர் தங்கமணி, பகுதி செயலாளர் கந்தன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் முல்லைவேந்தன், எம்.ஜி,ஆர்,. இளைஞரணி செயலாளர் சிவபதி பங்கேற்று பேசினர்.
பின், முன்னாள் அமைச்சர் சம்பத் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் என்.ஓ.சி.எல்., நிறுவனத்தில் 2,000 ஏக்கரில் நிலங்கள் உள்ளன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் இங்குள்ள தொழிற்சாலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வர முன்மாதிரி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டு காலத்தில் இந்த ஒப்பந்தப்படி தொழில் தொடங்கப்பட்டிருந்தால் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
கார்த்திக், அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், இலக்கிய அணி ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.