sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

/

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

59


ADDED : அக் 27, 2025 11:33 AM

Google News

ADDED : அக் 27, 2025 11:33 AM

59


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் மருத்துவ செலவு,கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து இருக்கிறார்.

த.வெ.க., கட்சித் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் பிரசாரம் செய்தார். கடந்த செப்., 27ம் தேதி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். கரூரில் நடந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை, விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது.

அதற்காக அவர் முயன்றதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இச்சூழலில், இறந்த வர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவெடுத்து, அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் இன்று (அக் 27) கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது உயிர் இழந்தோர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us