/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் 'மாஜி' அமைச்சர் சம்பத் தீவிரம்
/
தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் 'மாஜி' அமைச்சர் சம்பத் தீவிரம்
தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் 'மாஜி' அமைச்சர் சம்பத் தீவிரம்
தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் 'மாஜி' அமைச்சர் சம்பத் தீவிரம்
ADDED : ஏப் 01, 2024 06:42 AM

கடலுார் : கடலுார் ஒன்றிய பகுதிகளில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார்.
கடலுார் அடுத்த நல்லாத்துார், துாக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், திருப்பனாம்பாக்கம், கீழ் குமாரமங்கலம், கீழ் அழிஞ்சிப்பட்டு, ரெட்டிச்சாவடி, பெரியகாட்டுப்பாளயைம், கிளஞ்சிக்குப்பம் பகுதிகளில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:
'அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்றவற்றை தி.மு.க., ரத்து செய்தது. சிவக்கொழுந்து வெற்றி பெற்றால் கடலுார் தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து லோக்சபாவில் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வார்.
இவ்வாறு சம்பத் பேசினார்.
வேட்பாளர் சிவக்கொழுந்து பேசுகையில், 'அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரது ஆசியுடன் போட்டியிடுகிறேன். 2011ல் அ.தி.மு.க., கூட்டணியில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டேன். தற்போது, மீண்டும் அதே கூட்டணியில் கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் கடலுார் தொகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்' என்றார்.
அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றியக்குழு சேர்மன் பக்கிரி, ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், காசிநாதன், முன்னாள் கவுன்சிலர் கந்தன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன். மாவட்ட பிரதிநிதி ராபர்ட், ஊராட்சி தலைவர்கள் முருகன், கமல், சுகுமாறன், மாவட்ட கவுன்சிலர்கள் ஆதி நாராயணன், கல்யாணி ரமேஷ், தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் சித்தநாதன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, மாநகர செயலாளர் சரவணன்.
ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, பொருளாளர் செல்வகணபதி, துணை செயலாளர்கள் பூபாலன், ரங்கநாதன், பிச்சைவேலு, மாவட்ட பிரதிநிதிகள் தனசேகர், ஞானவேல், பிரபு, ஒன்றிய நிர்வாகிகள் சம்பந்தம், குமரன், மதியழகன், வேலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

