/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினிக்கு மாஜி., எம்.எல்.ஏ.,க்கள் தீவிர பிரசாரம்

ADDED : ஏப் 17, 2024 11:41 PM

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அருள், தமிழழகன் ஆகியோர் தீவிர ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக, சிதம்பரம், மீதிக்குடி, கோவிலாம்பட்டி, சி.முட்லுார், கீழ்அனுவம்பட்டு, கீழச்சாவடி, கிள்ளை, நஞ்சைமுகத்து வாழ்க்கை, பொன்னந்திட்டு, அத்தியாநல்லுார், கொத்தட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று தீவிர பிரசாரம் செய்யப்பட்டது.
பிரசாரத்திற்கு பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் பாலு விக்னேஷ்வரன் தலைமை தாங்கினார். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் புவனகிரி எம்.எல்.ஏ. வுமான அருள், திட்டக்குடி சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தமிழழகன் ஆகியோர், மத்திய அரசின் திட்டங்களை கூறி, தாமரை சின்னத்தில் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது, மாவட்ட நிர்வாகி ரவி, ஐயப்பன், மகேஷ், தங்கமணி, கந்தசாமி, தாமரை கண்ணன், சந்தோஷ், சரவணன், பாலகிருஷ்ணன், கொளஞ்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.