/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு இலவச பஸ் என்.எல்.சி., சேர்மன் அறிவிப்பு
/
மாணவர்களுக்கு இலவச பஸ் என்.எல்.சி., சேர்மன் அறிவிப்பு
மாணவர்களுக்கு இலவச பஸ் என்.எல்.சி., சேர்மன் அறிவிப்பு
மாணவர்களுக்கு இலவச பஸ் என்.எல்.சி., சேர்மன் அறிவிப்பு
ADDED : ஆக 16, 2024 06:19 AM

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி.,நிறுவனத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நெய்வேலி பாரதி விளையாட்டரங்கில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தேசிய கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து, என்.எல்.சி., நிறுவன பாதுகாப்பு படை, தீயணைப்பு படை, மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரண சாரணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மனிதவளத்துறை செயல் இயக்குநர்சமீர் ஸ்வரூப் வரவேற்றார்.
சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, பேசுகையில், 'தற்போது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன் 482 ஜிகா வாட். 2030ம் ஆண்டிற்குள், நமது மொத்த மின் உற்பத்தித் திறன் 20 ஜிகாவாட்டிற்கும், நமது மொத்த சுரங்கத்திறனை 100 மில்லியன் டன்னுக்கும், விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் 2024--25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி முடிவுகளில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.566.69 கோடியை ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டில் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நெய்வேலி ஆர்ச் கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து மந்தாரக்குப்பம் பஸ் நிறுத்தம் வரை பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்' என்றார்.
விழாவில் சுரங்கத்துறை இயக்குநர் மற்றும் திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குநர் வெங்கடாசலம், நிறுவன கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.கலைநிகழ்ச்சிகள் நடந்தன.