டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
UPDATED : அக் 10, 2026 07:50 PM
ADDED : அக் 10, 2026 07:47 PM
கடலுார்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குருப்–4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 13 ம்தேதி துவங்குகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுாரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நுாலக வசதி உள்ளது.
அதன்படி இந்தாண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் நோக்கில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் 13ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் வாரத்தேர்வுகள் நடத்துவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
