UPDATED : அக் 10, 2026 08:02 PM
ADDED : அக் 10, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்த சென்ற இந்திய கம்யூ., பொதுச் செயலாளர் ராஜா, மா.கம்யூ., பொதுச் செயலாளர் பேபி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூ., மாநகர செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் மணிவண்ணன், முருகன், அரிகிருஷ்ணன், பாக்கியம், பாலு, இந்திய கம்யூ., குளோப், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., பழனிவேல், பால்கி, வாலண்டினா, மருதவாணன் கண்டன உரையாற்றினர்.
