/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்
/
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்
ADDED : மே 30, 2024 05:25 AM
கடலுார்: கடலுாரில் நடத்தப்படும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்விற்கான இலவச பயிற்சியில் பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், சி குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிடப்பட்டது.
அந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வசதியாக, இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணி முதல் 1:30 வரையிலும், மாலை 2:00 மணி முதல் 5:00 வரை நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குரூப் 1 முதல் நிலை தேர்விற்கு விண்ணப்பித்த நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.