/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொன்னேரி ரயில்வே பாலம் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்து
/
பொன்னேரி ரயில்வே பாலம் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்து
பொன்னேரி ரயில்வே பாலம் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்து
பொன்னேரி ரயில்வே பாலம் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்து
ADDED : செப் 08, 2024 06:09 AM

பெண்ணாடம்: 'பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு இல்லாமல், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பெ.பொன்னேரி ரயில்வே கேட் அடிக்கடி போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டில் 23 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாக வாகனங்கள் தாறுமாக வந்ததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. அதனை தடுக்க அப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் ைஹமாஸ் விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி, வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது. இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, பெ.பொன்னேரி மேம்பாலம் முகப்பு ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைத்து, விபத்து தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.