/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெனரேட்டர் பழுதால் அடிக்கடி குடிநீர் 'கட்'
/
ஜெனரேட்டர் பழுதால் அடிக்கடி குடிநீர் 'கட்'
ADDED : ஏப் 24, 2024 03:01 AM
நெல்லிக்குப்பம் நகராட்சியில் காலை, மாலை என, இரு வேலையும் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்கி வருகின்றனர். நகரின் பெரும்பாலான பகுதிக்கு ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள குடிநீர் டேங்கில் இருந்தே குடிநீர் வழங்கப்படுகிறது. இங்குள்ள ஜெனரேட்டர் பழுதாகி 2 ஆண்டுகள் ஆகியும் சரி செய்யப்படவில்லை.
இதனால், மின்சாரம் தடைபடும்போது, டேங்கில் குடிநீர் ஏற்ற முடியாமல், குடிநீர் விநியோகம் பாதிக்கிறது. இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை அடிக்கடி தொடர்ந்து வருகிறது.
கோடை காலமான தற்போது, மின்தடை அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால் ஜெனரேட்டரை சரி செய்து, மக்கள் குடிநீர் தடைபடாமல் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

