/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை கிடைக்காத விரக்தி வாலிபர் தற்கொலை
/
வேலை கிடைக்காத விரக்தி வாலிபர் தற்கொலை
ADDED : ஏப் 14, 2024 05:48 AM
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்த பாபு என்பவர் மகன் மணிகண்டன், 26; பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் கடந்த இரண்டு மாதம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக கேண்டீனில் உதவியாளராக வேலை செய்தார். சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார்.
நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டு படுக்கை அறையில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலுார் புதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தந்தை பாபு கொடுத்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

