ADDED : செப் 17, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில், காசு வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, தெற்கு பெரியார் நகர் அய்யனார் கோவில் அருகே கந்தசாமி மகன் சுரேஷ், 47, துரைஇளம்வழுதி மகன் சத்தியாகவுர், 32, கந்தசாமி மகன் மணவாளன், 32, ராஜேந்திரன் மகன் சிவா, 32, ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரிந்தது.
அங்கிருந்த சீட்டு கட்டுகள், 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

