/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூரில் காங்., வேட்பாளரை ஆதரித்து கணேசன் பிரசாரம்
/
மங்களூரில் காங்., வேட்பாளரை ஆதரித்து கணேசன் பிரசாரம்
மங்களூரில் காங்., வேட்பாளரை ஆதரித்து கணேசன் பிரசாரம்
மங்களூரில் காங்., வேட்பாளரை ஆதரித்து கணேசன் பிரசாரம்
ADDED : ஏப் 14, 2024 05:49 AM

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய கிராமங்களில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் காங்., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கணேசன் பிரசாரம் செய்தார்.
கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, மங்களூர் ஒன்றியத்தில் சிறுகரம்பலுார், காஞ்சிராங்குளம், பொயனப்பாடி, கச்சிமயிலுார், அடரி, அ.களத்தூர், அரியநாச்சி, தொண்டாங்குறிச்சி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று அமைச்சர் கணேசன் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார். குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார். மகளிருக்கு உரிமைத் தொகை, இலவச பஸ் வசதி, இல்லம் தேடி மருத்துவம், பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவந்துள்ளார். திட்டக்குடியில் கணவரை இழந்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைக்கப்படும். கல்விக்கடன், விவசாய கடன் சலுகைகள் கிடைக்கும். எனவே காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், வி.சி., மாவட்ட செயலர் திராவிடமணி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, அமிர்தலிங்கம், ம.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சம்பத்குமார், வரதராஜன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், வி.சி., நிர்வாகிகள் காசி, அருண், தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், பழனிவேல், வெங்கடேசன், சுப்ரமணியன், ரவிக்குமார், நல்லதம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

