ADDED : ஏப் 22, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி அகிலா, 26. இருவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை இருந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அகிலா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

