ADDED : செப் 10, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சதீஷ்குமார், ஊராட்சி தலைவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் செந்தில்குமார் பரிசு வழங்கினார்.விழாவில், அருண்மொழி, அருண்குமார், தமிழ்மொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

