/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஞானகுரு வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
ஞானகுரு வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 11:22 PM

திட்டக்குடி : திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்றதையொட்டி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி பரிசு வழங்கினர்.
திட்டக்குடி ஞானகுரு வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 42 மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி ஹரிணி 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்தார். மாணவி ஹர்ஷினி 561 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி காந்தா 549 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
500 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பள்ளி நிறுவனர் கோடி, தாளாளர் சிவகிருபா, பள்ளி முதல்வர் அய்யாதுரை, சால்வை அணிவித்து வாழ்த்தி, கேடயம் வழங்கி பாராட்டினர்.
பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

