/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு விதை பண்ணையில் ஆடாதொடா கன்று உற்பத்தி வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

ADDED : ஆக 19, 2024 11:35 PM
சேத்தியாத்தோப்பு: தமிழக முதல்வரின் 'மண்ணுயிர் காத்து; மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் அரசு உதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆடாதொடா, நொச்சி, தக்கை பூண்டுகளை வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.
சேத்தியாத்தோப்பு, புவனகிரி வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் மண் மலட்டுத் தன்மையை மாற்றும் வகையில் 'மண்ணுயிர் காத்து; மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் மிராளூர், வண்டுராயன்பட்டு அரசு விதைப் பண்ணைகளில் ஆடாதொடா, நொச்சி கன்றுகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதனை கடலுார் வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும், விதை சுத்திகரிப்பு நிலையங்களில் சான்றொப்பம் ஒட்டப்பட்டுள்ள நெல் குவியல்களை ஆய்வு செய்து உடனடியாக வேளாண் விரிவாக்க மையங்களுக்கு மாற்றம் செய்திட அறிவுறுத்தினர்.
அரசு விதைப்பண்ணை மேலாளர்கள் உண்ணாமலை, மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.