/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ.ஆதனுார் செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
கோ.ஆதனுார் செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 09, 2024 05:36 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் கிராமத்தில் உள்ள விநாயகர், செல்லியம்மன், மாரியம்மன், நவகிரம், நாகாத்தம்மன், ஆதிசக்தீஸ்வரர், வெங்கடாஜலபதி, கருடன் மண்டபம், கம்பத் ஆழ்வார், ஆஞ்சநேயர், அய்யப்பன், திரவுபதி, நந்தி மண்டபம், ஆதிபராசக்தி, கருப்பசாமி, கள்ளவீரன், கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் 7ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதிேஹாமம், கோ பூஜை, மாலை 4:30 மணிக்கு பிரவேச பலி, முதல்கால யாக பூஜை,இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று கும்பாபிேஷகத்தையொட்டி, காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.