ADDED : மார் 30, 2024 06:38 AM

கடலுார் : கடலுாரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுசரித்தனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப் படுகிறது.
அதன்படி, கடலுார் பீச் ரோடு புனித கார்மேல் அன்னை தேவாலயம், பாரதிசாலை ஆற்காடு லுாத்தரன் திருச்சபை, மஞ்சக்குப்பம் துாய எபிபெனி தேவாலயம், முதுநகர் கிறிஸ்து நாதர் தேவாலயம், சொரக்கல்பட்டு துாய யோவான் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நேற்று முன்தினம் பெரிய வியாழனும், நேற்று புனித வெள்ளி கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி புனித தோமையர் அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று சாலை 4:30 மணியளவில் பங்கு தந்தை மரியசூசை தலைமையில் சிலுவை பாதை வழிபாடு மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் சிலுவையின் 7 திருவசனங்கள் வாசிக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

