/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எளிய மக்களுக்கான ஆட்சி: அமைச்சர் கணேசன் பெருமிதம்
/
எளிய மக்களுக்கான ஆட்சி: அமைச்சர் கணேசன் பெருமிதம்
ADDED : ஜூலை 17, 2024 12:08 AM

சிறுபாக்கம், : தமிழகத்தில் ஏழை மக்களுக்கான ஆட்சி நடக்கிறது என, அமைச்சர் கணேசன் பேசினார்.
சிறுபாக்கம் அடுத்த மங்களூர் மற்றும் மலையனுார் ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. கூடுதல் கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் முன்னிலை வகித்தார். தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்து, 15 துறைகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், ஏழை எளிய மக்கள் பயனடையும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இல்லம் தேடிக் கல்வி, இல்லம் தேடி மருத்துவம், மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான கட்டணமில்லா பஸ் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அதுபோல், மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை தேடி மக்கள் அலையாமல், அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் முகாமிட்டு மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, ஒரே வாரத்தில் தீர்வு காண்பார்கள். தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன், மங்களூர் ஒன்றிய செயலர் சின்னசாமி, அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, தாசில்தார்கள் மணிகண்டன், அந்தோணிராஜ், மோகன், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி, ஊராட்சி தலைவர்கள் ராமு, தேவராஜ், தமிழரசி, தனலட்சுமி சுரேஷ் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.