/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு
/
அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு
ADDED : செப் 16, 2024 05:00 AM

கடலுார், : கடலுாரில் நேரம் பிரச்னை தொடர்பாக தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8:30 மணியளவில், தனியார் பஸ் ஒன்று புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது. அதே மார்க்கத்தில் செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்றும் அங்கிருந்து புறப்பட்டது.
இதனால் இரண்டு பஸ்களுக்கும் இடையே நேர பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கடலுார் தபால் நிலையம் அருகே இரண்டு பஸ் டிரைவர்களும், சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது, நேரம் பிரச்னை தொடர்பாக பஸ்சை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபடக்கூடாது என்றும், இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தனியார் பஸ் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து, இரண்டு பஸ்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.