/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராவல் கடத்திய 4 பேர் கைது தப்பியோடிய மூவருக்கு வலை
/
கிராவல் கடத்திய 4 பேர் கைது தப்பியோடிய மூவருக்கு வலை
கிராவல் கடத்திய 4 பேர் கைது தப்பியோடிய மூவருக்கு வலை
கிராவல் கடத்திய 4 பேர் கைது தப்பியோடிய மூவருக்கு வலை
ADDED : மே 30, 2024 05:26 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கிராவல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடிவருகின்றனர்.
ஆலடி அடுத்த கொக்காம்பாளையத்தில் கிராவல் கடத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் ஆலடி போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள ஹரிதாசன் குட்டை அருகே கொக்காம்பாளையம் இளையராஜா,35; பிரபாகரன்,18; கலர்குப்பம் மணி மகன் பாலமுருகன்,30; குருவன்குப்பம் பஞ்சமூர்த்தி மகன் பாலமுருகன்,30; டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலர்குப்பம் ரமேஷ், ஆலடி திலீப்குமார், ஜே.சி.பி., உரிமையாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, இளையராஜா, பாலமுருகன், பாலமுருகன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய மற்ற மூவரை தேடிவருகின்றனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., வாகனம் மற்றும் மூன்று டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மணலுார் மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.