/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை நீர் தேங்கியதால் பச்சை பயறு செடி அழுகல்
/
மழை நீர் தேங்கியதால் பச்சை பயறு செடி அழுகல்
ADDED : மார் 14, 2025 05:13 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில் மழையால் உளுந்து, பச்சை பயறு வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் உளுந்து, பச்சை பயறு சாகுபடி செய்துள்ளனர். இதேபோன்று, கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் வட்டாரங்களிலும் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பச்சை பயறு விதைப்பு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது.
தண்ணீர் தேங்கிய உளுந்து வயல்களில் செடிகள் வெப்பம் காரணமாக வாடி அழுகி வருகின்றது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உளுந்து, பச்சை பயறு விதைப்பு செய்துள்ள விவசாயிகள் காப்பீடு தேதி தெரியாமல் பதிவு செய்யாமல் விட்டுள்ளனர்.
எனவே, வேளாண் அதிகாரிகள் மழையால் பாதிப்பிற்குள்ளான பச்சை பயறு வயல்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.