/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்வு கூட்டம்
/
கடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்வு கூட்டம்
கடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்வு கூட்டம்
கடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்வு கூட்டம்
ADDED : ஜூன் 25, 2024 06:09 AM
கடலுார், : முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில,் முன்னாள் படைவீரர்ள், அவரது குடும்பத்தினர் மற்றும் படைப் பிரிவில் பணிபுரியும் வீரர்கள் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் -வரும் 27ம் தேதி மாலை 3:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக அரங்கில் நடக்கிறது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி குறைகளை கேட்கிறார்.
முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினர் மற்றும் படைப் பிரிவில் பணிபுரியும் குடும்பத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் இணைத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.