/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு கூட்டம்
/
கடலுாரில் ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மார் 07, 2025 07:19 AM

கடலுார்: கடலுார் கோட்ட வணிகவரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு, கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த கூட்டத்தில் கோட்ட இணை ஆணையர் சங்கரமூர்த்தி தலைமை தாங்கினார். நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் சுமித்ரா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், சேம்பர் ஆப் காமர்ஸ் கடலுார் தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர் மணிவண்ணன் வரவேற்றார். துணை ஆணையர் பிரகாஷ் விளக்க உரையாற்றினார்.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாக வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிலுவை வரித் தொகை முழுவதையும் வரும் 31ம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதத் தொகை முழுதும் தள்ளுபடி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், சிறு குறு நிவனங்கள் தலைவர் அசோக், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் வீரப்பன், இணைச் செயலாளர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதவி ஆணையர் பத்மாவதி நன்றி கூறினார்.