/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா விற்றால் 'குண்டாஸ்' கடலுார் எஸ்.பி.,எச்சரிக்கை
/
கஞ்சா விற்றால் 'குண்டாஸ்' கடலுார் எஸ்.பி.,எச்சரிக்கை
கஞ்சா விற்றால் 'குண்டாஸ்' கடலுார் எஸ்.பி.,எச்சரிக்கை
கஞ்சா விற்றால் 'குண்டாஸ்' கடலுார் எஸ்.பி.,எச்சரிக்கை
ADDED : மார் 02, 2025 06:40 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கஞ்சா விற்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என, எஸ்.பி., எச்சரித்துள்ளார்.
கஞ்சா விற்பனையை தடுக்க, எஸ்.பி., ஜெயக்குமார் அதிரடி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடந்த 2 மாதங்களில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 61 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாக மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிதம்பரம், கலிபெருமாள் தெருவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி சிவா (எ) ஒடப்பு சிவா (எ) சிவக்குமார்,28; குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி., கூறுகையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்.