/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி பூஜை
/
பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி பூஜை
ADDED : மே 02, 2024 12:18 AM

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
குரு பகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சியானார். அதையொட்டி, கடலுார் திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோவில் மகா மண்டபத்தில் பரிகார யாகம் நடத்தப்பட்டது. குண்டம் அமைத்து 96 வகையான மூலிகை பொருள்கள், பழ வகைகள், நவ தானியங்கள் யாக பூஜையில் போட்டு பரிகார சிறப்பு ஹோமம், பூர்ணாகிதி, மகா தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்கள் மற்றும் கலச நீரால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, குரு பெயர்ச்சி பரிகார அர்ச்சனைகள் நடந்தன.
விருத்தாசலம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாலை 4:00 மணிக்கு மேல், நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து 5:19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததும், பரிகார ராசிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம் வழங்கி பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர், நெய் விளக்கேற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

