/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குருஞான சம்பந்தர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
குருஞான சம்பந்தர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 04, 2025 06:51 AM

சிதம்பரம்; சிதம்பரம் கனகசபை நகரில் இயங்கி வரும் தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24- ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளிச் செயல் தலைவர் சுவேதகுமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் ஆண்ட றிக்கை வாசித்தார். விழாவில் தென்கிழக்கு ஆப்பிரிக்கா சீஷெல்ஸ் தீவின் கவுரவ தூதர் ஜெனரல் சேஷாசாய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.
பொருளாளர் தர்பாரண்யன், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவானந்தவல்லி, செந்தில்வேலன், அருண், கமல்சந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராகவன் நன்றி கூறினார்.