/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனநிலை பாதித்த பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
/
மனநிலை பாதித்த பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
ADDED : மே 10, 2024 01:08 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை மகளிர் போலீசார் மீட்டு, கடலுார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனை அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த ஒரு வாரமாக சுற்றித் திரிந்தார். அவருக்கு அங்குள்ள குடியிருப்புகளில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இதையறிந்த ஆனந்தி என்பவர், விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிடம் தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட போலீசார் சென்று, மனநிலை பாதித்த பெண்ணை மீட்டனர். பின்னர், 102 தாய் சேய் நல ஊர்தி மூலம் அழைத்து செல்லப்பட்டு, கடலுார் ஒயாசிஸ் தொண்டு நிறுவன காப்பகத்தில், அதன் நிர்வாகி எப்சிபா தவராஜ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார்.