/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹான்ஸ் விற்பனை 2 கடைகளுக்கு 'சீல்'
/
ஹான்ஸ் விற்பனை 2 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஆக 08, 2024 12:16 AM
கடலுார், : விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
விருத்தாசலம் நகராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி பூட்டி 'சீல்' வைத்தார்.
தொடர்ந்து,2 ஓட்டல்களில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட 5 கிலோ பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்து, தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்கக் கூடாது எனவும், வெனிகர் என்ற ரசாயன திரவம் பயன்படுத்தி பிரைட் ரைஸ் தயாரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி ஓட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடனிருந்தார்.