/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சூடுபிடித்த தேர்தல் களம்: பிரியாணி மாஸ்டர்கள் 'பிசி'
/
சூடுபிடித்த தேர்தல் களம்: பிரியாணி மாஸ்டர்கள் 'பிசி'
சூடுபிடித்த தேர்தல் களம்: பிரியாணி மாஸ்டர்கள் 'பிசி'
சூடுபிடித்த தேர்தல் களம்: பிரியாணி மாஸ்டர்கள் 'பிசி'
ADDED : மார் 28, 2024 04:19 AM
விருத்தாசலம் : தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள், வாக்காளர்களுக்கு பிரியாணி சுடச்சுட தர வேண்டி இருப்பதால் பிரியாணி மாஸ்டர்கள் பிசியாகியுள்ளனர்.
பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் முறையே பா.ம.க., - தே.மு.தி.க., - காங்., கட்சிகள் களமிறங்கியுள்ளன. மனுதாக்கல் முடிந்த நிலையில், அந்தந்த கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம், வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிப்பு பணிகள் தீவிரமாக துவங்கியுள்ளன.
தேர்தல் என்றாலே வாக்காளர்கள், கட்சித் தொண்டர்களுக்கு சுடச்சுட பிரியாணி, குவாட்டர் வழங்குவது வழக்கம். இதற்காக, அந்த நேரத்தில் ஓட்டல்களில் ஆர்டர் கொடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், பிரதான கட்சிகள் சார்பில் பிரியாணி மாஸ்டர்களை முன்கூட்டியே அட்வான்சாக புக் செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோப்புகள், நிர்வாகிகளின் வீட்டு தோட்டத்தில் பிரியாணி சமைக்கப்பட உள்ளது.
இதனால் மாவட்டத்தில் சுவையாக பிரியாணி தயாரிக்கும் மாஸ்டர்கள் பிசியாகி விட்டனர். அதுபோல், ஆடு, கோழி வகைகளை முன்கூட்டியே ஆர்டர் வாங்கியதால், ஒரு சில இறைச்சி கடை உரிமையாளர்களும் பிசியாகினர்.