/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது
ADDED : மார் 09, 2025 05:37 AM

கடலுார், : கடலுாரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி்ண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் வழிபாட்டிற்கு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 31 பேரை புதுநகர் போலீசார் கைது செய்தனர்.
அதேபோன்று, சிதம்பரம் கஞ்சித்தொட்டி பஸ் நிறத்தத்தில், நகர தலைவர் நாகராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.