ADDED : ஆக 29, 2024 07:35 AM

கடலுார்: கடலுார் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மத்திய அரசு வங்ேதசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதலை கண்டித்தும், மனித உரிமை மீறல்கள், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி, மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர்சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன்வரவேற்றார். மாநில செயலாளர் சுனில்குமார், கோட்ட பொறுப்பாளர் முருகையன் கண்டன உரையாற்றினர். வங்கதேசத்திற்கு எதிராகவும், இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்தி,மணிகண்டன், சரவணன், வெங்கடேசன், பெருமாள், ரவிச்சந்திரன், சிவலோகநாதன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேல்முருகன் நன்றி கூறினார்.