/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி
/
மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி
மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி
மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி
ADDED : மார் 03, 2025 07:25 AM
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு குளிர் பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் கலையரசன்,28; கடலுார் சிப்காட் தனியார் நிறுவன டிரைவர். இவருக்கும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணிற்கும் இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஜன., 26ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி மனைவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி, புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.