/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி அடித்து கொலைகணவருக்கு ஆயுள் தண்டனை
/
மனைவி அடித்து கொலைகணவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 14, 2025 05:27 AM

கடலுார்: மாமியாருக்கு சொந்தமான வீட்டை எழுதி தரும்படி கேட்டு மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு கடலுார் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த விழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 47; கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேசிங்கு மகள் தமிழ் என்கிற தமிழ்செல்வி, 35; என்பவரும் காதலித்து திருமணம் செய்தனர். 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
சண்முகம் தினமும் குடித்துவிட்டு மாமியார் ரத்தினாபதிக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுமாறு தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்., 18ம் தேதி காலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த சண்முகம், மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்ச்செல்வியை, உருட்டு கட்டையால் சண்முகம், சரமாரியாக தாக்கினார். இதையடுத்து, 20ம் தேதி மீண்டும் தமிழ்ச்செல்வியை காலால் உதைத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்து, கடலுார் மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், குற்றம்சாட்டப்பட்ட சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.