/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது
/
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது
ADDED : ஏப் 10, 2024 01:08 AM

சிதம்பரம் :மத்தியில் பா.ஜ., ஆட்சி மீண்டும் வந்தால் ரேஷன் கடைகள் மூடப்பட்டுவிடும் என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். நேற்று அவர், வி.சி. கட்சி தேர்தல் அறிக்கையை வெளிட்டு பிரசாரத்தை துவக்கினார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம்அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டபட்டினம் எல்லையம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்பு, தேர்தல் பிரசாரத்தை துவக்கினர்.
அங்கிருந்து சிவபுரி, அண்ணாமலை நகர், உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை , வல்லத்துறை, வடக்கு மாங்குடி, அத்திப்பட்டு, கருப்பூர், நந்திமங்கலம், காட்டுக்கூடலுார், குமராட்சி, முள்ளங்குடி, தெம்மூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து, காட்டுமன்னார்கோவில் ரம்ஜான் தைக்காலில் முடித்தனர்.
பிரசாரத்தில் திருமாவளவன் பேசுகையில், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. நூறு நாள் வேலை நிறுத்தப்படும், இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும், ரேஷன் கடைகள் மூடப்படும். உதய சூரியன் சின்னம் போல், இந்த தேர்தலில் பானை சின்னத்தில் அதிக ஓட்டுகளை அளித்து வெற்றி பெற செய்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற ஒத்துழைக்க வேண்டும் என, பேசினார்.
அப்போது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி, கிள்ளை ஒன்றிய துணை சேர்மன் ரவீந்திரன், மறுமலர்ச்சி வன்னியர் சங்க தலைவர் கோவி மணிவண்ணன், கடவாச்சேரி வாசு, தி.மு.க.,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், பாலமுருகன், பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சோழன், ராஜேந்திரன், நடராஜன், கம்மாபுரம் ராயர், வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி, மூ.மு.க., பொதுச் செயலாளர் செல்வராஜ், கம்யூ., ராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

