/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சர் பெயரை மறைச்சா கோவிச்சுக்குவாராம்...
/
அமைச்சர் பெயரை மறைச்சா கோவிச்சுக்குவாராம்...
ADDED : மார் 27, 2024 07:20 AM

திட்டக்குடி : திட்டக்குடி நகர பஸ் நிலைய நிழற்குடையில் அமைச்சர் பெயரை மறைக்காமல், தலைவர்களின் படங்கள் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 16ம் தேதி முதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதன்படி, அரசு அலுவலகங்கள், பொதுவெளியில் உள்ள அரசியல் தலைவர்களின் படங்கள், பெயர்கள் மறைக்கப்பட வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் உள்ள அ.தி.மு.க.,தலைவர்களின் படங்கள், பெயர்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டன. ஆனால், திட்டக்குடி நகராட்சி பஸ்நிலையத்தில் இருந்த தலைவர்களின் படங்கள் பேப்பர் மூலம் மறைக்கப்பட்டது.
அதிலிருந்து அமைச்சர் கணேசனின் பெயர் மறைக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். மற்ற நிழற்குடைகளில் இருந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெயர் உட்பட அனைத்தையும் மறைத்த நகராட்சி ஊழியர்களுக்கு, திட்டக்குடி பஸ்நிலையத்தில் உள்ள அமைச்சர் கணேசன் பெயரை மறைப்பதில் என்ன தயக்கம் என தெரியவில்லை. இதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அமைச்சர் பெயரை மறைச்சா எப்படி வெகுமதி கொடுப்பார் என்றும், தேர்தல் அலுவலர்கள் இன்னும் துாக்கம் கலைய வில்லையா என்றும் கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

