/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இளங்கியனுார் ஆளில்லா ரயில்வே கேட் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
/
இளங்கியனுார் ஆளில்லா ரயில்வே கேட் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
இளங்கியனுார் ஆளில்லா ரயில்வே கேட் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
இளங்கியனுார் ஆளில்லா ரயில்வே கேட் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
ADDED : ஜூன் 26, 2024 11:22 PM
விருத்தாசலம்: இளங்கியனுார் ஆளில்லா ரயில்வே கேட் பகுதியை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் - பிஞ்சனுார் சாலை வழியாக பஸ், லாரி வேன், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலையின் குறுக்கே, இளங்கியனுார் பகுதியில் உள்ள விருத்தாசலம் - சேலம் ரயில்பாதையில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, பணிகளை துவங்கியது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், இதுசம்பந்தமாக, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். அதில், ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில், கேட் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
இதன்காரணமாக, கலெக்டர் அருண்தம்புராஜ், நேற்று காலை 10:30 மணியளவில் இளங்கியனுார் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்த பிரச்னை குறித்து, அரசிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.