/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் பறிமுதல் வாகனங்கள் வீணாகிறது
/
புவனகிரியில் பறிமுதல் வாகனங்கள் வீணாகிறது
ADDED : மே 19, 2024 04:27 AM

புவனகிரி : பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புவனகிரி காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக மக்கி சேதமடைந்து வருகிறது.
புவனகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பைக், மினி சரக்கு லாரி, மாட்டு வண்டிகள் என பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த சில ஆண்டுகளாக புவனகிரி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கி சேதமாகிறது. இதனால் காவல் நிலையம் பகுதியில் முட்புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிப்போனது.
சிதம்பரம் காவல் நிலையத்தில், வழக்குகள் முடிக்கப்பட்டு, வழக்கு தொடர்புடைய வாகனங்களுக்கு தீர்வு கண்டது போல், புவனகிரியிலும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

