/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகள் போர்வையில் ஏரிகளில் மண் எடுத்து விற்பனை 'ஜோர்'
/
விவசாயிகள் போர்வையில் ஏரிகளில் மண் எடுத்து விற்பனை 'ஜோர்'
விவசாயிகள் போர்வையில் ஏரிகளில் மண் எடுத்து விற்பனை 'ஜோர்'
விவசாயிகள் போர்வையில் ஏரிகளில் மண் எடுத்து விற்பனை 'ஜோர்'
ADDED : செப் 11, 2024 01:43 AM

சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஏரியில் செம்மண் பரப்பு அதிகளவில் உள்ளது. வண்டல் மண் எடுக்க கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மண் புரோக்கர்கள் ஏரிகளில் அரசு விதிமுறையை மீறி பல அடி ஆழத்திற்கு தோண்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
புவனகிரி தாலுகாவில் எறும்பூர், சின்னநற்குணம், ஆணைவாரி, துறிஞ்சிக்கொல்லை, ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் வலசக்காடு பாண்டியன் ஏரி, பாளையங்கோட்டை ஏரி, சோழத்தரம் ஏரி, புடையூர் ஏரி ஆகியவை விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தாசில்தார்கள் விவசாயிகள் பெயரில் மண் எடுக்க அனுமதி கொடுத்துள்ளதை பயன்படுத்தி கொண்ட புரோக்கர்கள், பல அடி ஆழங்களில் ஏரியை தோண்டி மண்ணை டிராக்டரில் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
சோழத்தரத்தில் எடுக்கப்படும் வண்டல் மண் குமாரக்குடி, சாத்தமங்கலம், ஒரத்துார், கந்தகுமரன் வரை டிராக்டரில் எடுத்து சென்று விற்கின்றனர். மண் எடுக்கும் புரோக்கர்கள் போலீசாரையும் கவனித்து விடுகின்றனர். தற்போது புடையூர் ஏரிதான் இந்த பகுதியில் செம்மண் அதிகளவில் உள்ளதால் விற்பனை ஜோராக நடக்கிறது.
எனவே கலெக்டர், புடையூர் ஏரியை நேரடி ஆய்வு செய்து மண் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

