/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செந்தாமரை நகர் மனைப்பிரிவு சுத்துக்குளத்தில் துவக்க விழா
/
செந்தாமரை நகர் மனைப்பிரிவு சுத்துக்குளத்தில் துவக்க விழா
செந்தாமரை நகர் மனைப்பிரிவு சுத்துக்குளத்தில் துவக்க விழா
செந்தாமரை நகர் மனைப்பிரிவு சுத்துக்குளத்தில் துவக்க விழா
ADDED : மே 26, 2024 05:54 AM

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த சுத்துக்குளத்தில் வசந்தி நில வணிக குழுமம் சார்பில் செந்தாமரை நகர் மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.
விழாவில், தொழிலதிபர்கள் தங்கம் பைனான்ஸ் தங்க சேகர், தங்க பாண்டியன், டாக்டர் பாண்டிய முனியன், புதுச்சேரி பா.ம.க., அமைப்பாளர் கணபதி, ஊராட்சி தலைவர் பிரசன்னா, திவாகர், வசந்தா, செந்தாமரை, காசிநாதன், சத்யானந்தம், மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வசந்தி நில வணிகத்தின் மேலாண்மை இயக்குனர் தனசேகரன் மனைப்பிரிவு விற்பனையை துவக்கி வைத்து கூறுகையில், 'அரசு அப்ரூவல் பெற்ற செந்தாமரை நகர் மனைப்பிரிவில் மனைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மனைப்பிரிவு அருகில் ரயில் நிலையம் உள்ளது. 24 மணி நேர பஸ் வசதி, பாதுகாப்பான சுற்றுச் சுவர், தரமான குடிநீர், விசாலமான தார் சாலை, மின்சாரம், காற்றோட்டமான சூழல் உள்ளது. வங்கி கடன் பெற சட்ட விதிமுறைகளுடன் கூடிய வில்லங்கம் இல்லா ஆவணம் பெற ஏற்பாடு செய்து தரப்படும்' என்றார்.